ரூ. 857 கோடி சம்பளத்தில் செய்யறிவு வேலை! மெட்டா அழைப்பு!

சிறந்த திறன்வாய்ந்த செயல் நுண்ணறிவுப் பிரிவில் 100 மில்லியன் டாலர் சம்பளத்தில் வேலை வழங்க மெட்டா திட்டம்
கோப்புப் படம்
கோப்புப் படம்AP
Published on
Updated on
1 min read

சிறந்த திறன்வாய்ந்த செய்யறிவுப் பிரிவில் வேலை வழங்க மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மெட்டா நிறுவனத்தில் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உலகளவிலான பெரிய நிறுவனங்களில் மனிதர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, செய்யறிவின் உதவியை நாடி வருகின்றனர்.

அந்த வகையில், மெட்டா நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. ஆனால், தற்போது செய்யறிவுப் பிரிவில் சிறந்து விளங்குபவர்களை, தனது நிறுவனத்தில் பணிபுரிய மெட்டா அழைப்பு விடுத்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் புதிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் (Superintelligence) ஆய்வகத்துக்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோரைச் சேர்க்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையில், தான் நேரடியாக ஈடுபட்டால் மட்டுமே மெட்டாவில் புது தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.

பணிபுரிய விரும்புபவர்களுக்கு, மார்க் ஸக்கர்பெர்க்கின் இல்லத்தில் விருந்தளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்யறிவுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு (Top AI Talent) 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 857 கோடி) சம்பளமாக வழங்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பணிக்காக சாட்ஜிபிடி செயலியின் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ-யின் ஊழியர்களிடமும் மெட்டா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது நிறுவன ஊழியர்கள் யாரும் வெளியேறவில்லை என்று ஓபன்ஏஐ-யின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com