சீன அதிபர் ஷி ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீனா: கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு!

சீனாவின் கடற்படை தலைவா், மூத்த அணுசக்தி விஞ்ஞானியின் எம்.பி. பதவி பறிப்பு
Published on

சீன நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து அந்நாட்டு கடற்படை தலைமைத் தளபதி லீ ஹான்ஜான், மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியு ஷிபெங் ஆகியோா் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இருவரும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிா்கொண்டு வருவால், அவா்களின் நாடாளுமன்ற உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே சீன பாதுகாப்புப் படை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை நிா்வாகிகள் மீது இதேபோல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்நாட்டு பாதுகாப்புப் படையின் முன்னாள் ஜெனரல் மியாவ் ஹுவாவை நாடாளுமன்ற உறுப்பினா் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்ற நிலைக் குழு வாக்களித்ததாக அந்தக் குழு தெரிவித்தது.

பாதுகாப்புப் படையைச் சோ்ந்தவா்கள் மீது எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் காரணத்தை சரிவர தெரிவிக்காமல் ரகசியம் காப்பதே சீனாவின் வழக்கமாக உள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com