
ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதும் திறக்கப்படுவது நாளை (ஜூன் 27) மதியம் வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் துவங்கியதும், இருநாடுகளும் அனைத்து வகை விமானங்களுக்கான தங்களது வான்வழிப் பாதைகளை மூடின.
இதையடுத்து, தற்போது போர்நிறுத்தம் அமலிலுள்ள நிலையில் வான்வழித் தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரானின் கிழக்குப் பகுதியின் வான்வழிப் பாதைகள், கடந்த ஜூன் 25 ஆம் தேதி இரவு முதல் திறக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதையானது தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் வான்வழிப் பாதைகள் திறக்கப்படுவது, ஜூன் 28 மதியம் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக, ஈரானின் சாலை மற்றும் புறநகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மஜித் அகாவன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
SUMMARY
Iran's airspace opening postponed till Saturday afternoon.
இதையும் படிக்க: மங்கோலியாவில் வேகமெடுக்கும் தட்டம்மை பரவல்! 10,000-ஐ கடந்த பாதிப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.