அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி
அமெரிக்காவிலும் வாரிசு அரசியலா? டிரம்ப்பின் மகனும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகனும் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று ஆங்கில செய்தி ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.

அமெரிக்காவில் அதிபர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. மேலும், இருமுறைக்குமேல் ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியாது. அந்த வகையில், 2029 ஆம் ஆண்டில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் சகாப்தம் முடிவடைந்து விடும்.

அவருக்குப் பிறகு, அவரது கட்சியில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிகரித்து வருவதால், அடுத்த அதிபர் தேர்தல் எப்படி இருக்கும் என்பதில் ஆவல்தான் அதிகமாய் உள்ளது.

இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்பும் அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா? என்ற கேள்வியும் ஆங்கில செய்தி நிறுவனங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து, எரிக் டிரம்ப்பிடம் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று, உங்கள் குடும்பத்தினரையும் இதில் (அரசியலில்) கொண்டுவர நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த எரிக் டிரம்ப், கடந்த 10 ஆண்டுகளாக நான் அனுபவித்ததை என் குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமா? என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பொது வாழ்க்கையில் நுழைவது குறித்து எந்த முடிவும் இன்னும் மேற்கொள்ளவில்லை. இருப்பினும், அரசியல் பாதை எனக்கு எளிதானதே. காலம் சொல்லும்.

ஆனால், என்னைவிட அதிகமானோர் அங்கே உள்ளனர். அரசியலில் பணம் சம்பாதிக்காத ஒரு குடும்பம் உள்ளதென்றால், அது டிரம்ப் குடும்பம் மட்டுமே என்று தெரிவித்தார்.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட வாய்ப்புக்காக, சட்ட ரீதியிலான செலவுகள் மற்றும் பல்வேறு விசாரணைகளுக்காக மட்டுமே 500 மில்லியன் டாலரை டிரம்ப் குடும்பம் செலவிட்டதாகவும் கூறினார்.

டிரம்ப் குடும்பத்தின் வணிக செயல்பாடுகளை எரிக் டிரம்ப்தான் கவனித்து வருகிறார். டிரம்ப் அமைப்பின் மதிப்பை 8 பில்லியன் டாலரிலிருந்து 12 பில்லியன் டாலராக எரிக் டிரம்ப்தான் உயர்த்தினார்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com