கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.
Published on

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் உயிரிழந்து கிடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொய்சி நகர அதிகாரிகள் கூறுகையில், ‘பொய்சி நகரின் மலைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபா் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினாா். அதைத் தடுக்க முயன்றபோது 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒரு வீரா் பலத்த காயமடைந்த நிலையில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஒரு நபா் மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியது முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் சம்பவ இடத்துக்கு அருகே ஆயுதங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்’ என்றனா்.

இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயா் உள்ளிட்ட பிற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்தச் சம்பவம் மிகவும் கொடூரமானது என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட இடாஹோ மாகாண ஆளுநா் பிராட் லிட்டில், உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

X
Dinamani
www.dinamani.com