
அமெரிக்காவிலிருந்து நியூ ஸிலாந்துக்கு குடிபெயரப்போவதாகவும், நிரந்தரமாக அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருப்பதாகவும், டைட்டானிக், அவதார் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருப்பதால், நாளிதழ்களில் முதல் பக்கத்தில் டிரம்ப் புகைப்படம் இடம்பெறுவதால், தினமும் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை என்றும், அதனால் நியூ ஸிலாந்தில் நிரந்தரமாகத் தங்கவிருப்பதாகவும் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப்பால், அமெரிக்க அதிபர் பதவியே மோசமாகிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேமரூன், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, அது மிகவும் கொடூரமானது என்று பதிலளித்தார்.
டொனால்ட் டிரம்ப் ஆட்சியில், அமெரிக்கா எப்படி மாறுகிறது என்ற கேள்விக்கு, ஒழுக்கமான எல்லாவற்றிலிருந்தும் அமெரிக்கா விலகுவதை நான் பார்க்கிறேன்.
அமெரிக்கா எதனுடனும் இணைந்திருக்கவில்லை என்றால் அது வரலாற்று ரீதியாக நிற்கமுடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும். நாள்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன், அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது.
ஆனால், நியூ ஸிலாந்து சென்றுவிட்டால், அங்கு வரும் நாளிதழ்களில் இந்த செய்திகள் மூன்றாம் பக்கத்தில்தான் வரும். எனவே, நாள்தோறும், செய்தித் தாள்களில் தினமும் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அது இங்கு தவிர்க்க முடியாதது, இது ஒரு கார் விபத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்றது என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
நியூ ஸிலாந்து நாட்டில் உடனடியாக குடியுரிமை கேட்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடிபெயர்ந்து விடுவேன் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
இதையும் படிக்க.. வாட்ஸ்ஆப்பில் கைதவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.