
காஸா பகுதிக்குள் உதவிப் பொருள்கள் நுழைவதை நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் இன்று தெரிவித்துள்ளது.
நிரந்தர போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் தற்போதைய போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்த அமெரிக்காவின் முன்மொழிவை ஹமாஸ் ஏற்காவிட்டால் அதற்கான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் முதற்கட்ட போர்நிறுத்தம் நேற்றுடன் (மார்ச். 1) முடிவடைந்தது. இருதரப்பினரும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
மேலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தனது படைகளை முழுமையாக விடுவித்து, ஹமாஸ் அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கவேண்டும்.
போர்நிறுத்தத்தை ரமலான் அல்லது ஏப்ரல் 20 வரை நீடிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், டிரம்ப்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் என்பவரிடமிருந்து இந்த முன்மொழிவு பெறப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதன்படி, இரண்டாம் கட்ட போர்நிறுத்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் பாதி பணயக்கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றும், மீதமுள்ளவர்களை நிரந்தர போர்நிறுத்தத்திற்குப் பின்னர் விடுவிக்கவேண்டும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஹமாஸ் இந்த முன்மொழிவு தொடர்பாக பதிலளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.