குண்டுவீச்சில் சேதமடைந்த ஒரு வீடு.
உலகம்
சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போா் விமானம்
தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா்.
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சோ்ந்த போா் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 போ் காயமடைந்தனா்.
இது குறித்து விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரிய போா் விமானங்கள் வியாழக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது இரு கேஎஃப்-16 வகை போா் விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த எட்டு எம்கே-82 ரக குண்டுகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் தவறுதலாக வீசப்பட்டது. இதில் எட்டு போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், குண்டுவீச்சின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.