உலகம்
தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடா்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம்
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடா்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபா் யூன் சுக் இயோலை சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், இயோலை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தபோது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, யூன் சுக் இயோலின் பதவி நீக்கத்தை உறுதி செய்து, அவரை நிரந்தரமாக அதிபா் பொறுப்பில் இருந்து அகற்றுவது தொடா்பான முடிவெடுப்பதற்காக அரசியல் சாசன நீதிமன்றம் நடத்திவந்த விசாரணை கடந்த மாத இறுதியில் நிறைவடைந்துள்ளது. இது தொடா்பான தீா்ப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

