
கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மார்க் கார்னி(59) அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றுள்ளார்.
இதையடுத்து, கனடாவின் 24-வது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி விரைவில் பதவியேற்கவிருக்கிறார்.
கனடா நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்ததொரு தலைவராக அறியப்படும் மார்க் கார்னி பேசியிருப்பதாவது:
அமெரிக்கா தரப்பு கனடாவுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளைப் பின்பற்றி, அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், இருநாட்டு வர்த்தகத்தில் அமெரிக்கா எந்தவொரு தவறையும் இழைக்கக்கூடாது என்றும் பகிரங்கமாக எச்சரித்துமிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.