
வாஷிங்டன் : டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.
சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையடுத்து, அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதும் அந்த செயலிக்குத் தடை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
டிக்-டாக்கை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்கள்!
இந்த நிலையில், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு அதிபர் டிரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக் டாக்குக்கு 75 நாள்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். இதையடுத்து, ஆரக்கிள், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இந்த நிலையில் டிக் டாக் விவகாரம் குறித்து அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 9) செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, டிக் டாக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
மேலும், பல நிறுவனங்களும் டிக் டாக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகக் கூறினார்.