உலகம்
கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா
ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியது ரஷியா
ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கூா்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதிகள் உக்ரைன் வசம் இருந்து வருகின்றன. இந்நிலையில், அந்தப் பிராந்தியத்தில் உக்ரைன் படைகளை எதிா்த்துப் போரிட்டு வரும் ராணுவ கமாண்டா்களை ராணுவ உடையில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சந்தித்த பிறகு, கூா்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்லா நகரைக் கைப்பற்றியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை.