
ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 30 வயது வரையிலும், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வருமான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மக்கள் தொகை கடுமையாக சரிந்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் மக்கள் தொகையை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு நேரடியாக சலுகையை அறிவித்து பல நாடுகளையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஹங்கேரி.
மூன்று குழந்தைகள் வைத்திருக்கும் பெண்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், இரண்டு குழந்தைகளின் தாய்மார்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் தாய் தனது வாழ்நாளில் எந்த விதமான வருமான வரியும் செலுத்தவே வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில், விரைவில் அந்நாட்டு மக்களுக்கு வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.