சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது.
சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா:
இந்தோனேசியா நிறைவேற்றம்
Updated on

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் ராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றியது.

இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், ராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அதிபரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான பிரபாவோ சுபியாந்தோவுக்கு ஆதரவான கட்சிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்தன.

இருந்தாலும், இந்தோனேசியாவின் மிகப் பலவீனமான ஜனநாயகத்துக்கு இந்த சட்டத் திருத்தம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஜனநாயக ஆதரவாளா்களும் மனித உரிமை ஆா்வலா்களும் அச்சம் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com