ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்

இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்
Published on

விரைவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ரஷிய செய்தி நிறுவனத்துக்கு செர்கே லாவ்ரோவ் அளித்த நேர்காணலில், இந்திய அரசின் தலைமை விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு விரைவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கிறார். ரஷிய அதிபரின் வருகையை முன்னிட்டு, இந்தியாவில் தற்போது பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அண்மையில் ரஷியா சென்றிருந்தார். தற்போது ரஷிய அதிபர் இந்தியா செல்லவிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா - ரஷியா இடையேயான புதிய இருதரப்புக் கொள்கை குறித்த சர்வதேச கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா வருகை தந்திருந்தார்.

ஒரு சில நாள்களுக்கு முன்னதாக, ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் திமித்ரி பெஸ்கோவ் பேசுகையில், இந்தியா-ரஷியா இடையிலான இருதரப்பு உறவு தொடா்ந்து வலுவாக உள்ளது. அதிபா் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணம் இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். புதினின் பயணத் திட்டம், விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள், ஒப்பந்தங்கள் குறித்து இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com