ஜிப்லியால் உறக்கமின்றி தவிக்கும் ஊழியர்கள்! சாட் ஜிபிடி நிறுவனர் வேண்டுகோள்!

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள்
ஜிப்லி அனிமேஷன் சித்திரித்த பிரதமர் நரேந்திர மோடியின் படம்
ஜிப்லி அனிமேஷன் சித்திரித்த பிரதமர் நரேந்திர மோடியின் படம்X | BJP
Published on
Updated on
1 min read

ஜிப்லி அனிமேஷன் பயன்பாட்டை கொஞ்சம் நிறுத்துமாறு சாட் ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல் நுண்ணறிவு தளமான சாட் ஜிபிடியின் மூலம் ஜிப்லி என்ற அனிமேஷன் படங்களை உருவாக்குவது, சமீபத்தில் உலகளவில் டிரெண்டாகி உள்ளது. இந்த நிலையில், அனிமேஷன் படங்களைச் சித்திரிப்பதற்காக, சாட் ஜிபிடியை அதிகளவிலான பயனர்கள் பயன்படுத்துவதை கொஞ்சம் நிறுத்துமாறு ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, ஜிப்லி படங்கள் உருவாக்குவதை கொஞ்சம் நிறுத்துங்கள். எங்கள் குழுவினருக்கும் கொஞ்சம் உறக்கம் தேவை என்று பதிவிட்டுள்ளார்.

சாட் ஜிபிடியில் செயல் நுண்ணறிவால் நொடிப் பொழுதில் அனிமேஷன் படங்களை உருவாக்கித் தருவதால், இதனை பலரும் தற்போது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். செல்ஃபி முதல் செல்லப்பிராணிகள் வரையில் ஜிப்லி அனிமேஷனுக்கு உள்படுத்தப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை, முதலில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் அனுமதித்த நிலையில், தற்போது அனைவருக்கும் இலவசமாக சாட் ஜிபிடி வழங்கி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஜிப்லி அனிமேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதால், ஞாயிற்றுக்கிழமை மதியத்திலிருந்து சாட் ஜிபிடி தளத்தின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு முடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com