
ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா என்ற எக்ஸ் தளப் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மனிதர்கள் 100 பேர் சேர்ந்து, ஒரு கொரில்லாவை வெல்ல முடியுமா என்று உலகப் புகழ்பெற்ற யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் கேள்வி எழுப்பினார். பீஸ்ட்டின் இந்தக் கேள்வி, சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அதிகளவில் நகைச்சுவை விமர்சனங்களே பெருகி வருகின்றன.
100 மனிதர்கள் சேர்ந்து, முழுமையான வளர்ச்சியடைந்த ஒரு கொரில்லாவை வீழ்த்த முடியுமா? யாரேனும் போட்டிக்குத் தயாரா? என்று மிஸ்டர் பீஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
மிஸ்டர் பீஸ்ட்டின் இந்தப் பதிவுக்கு, தான் தயாராக இருப்பதாக மற்றொரு பிரபல யூடியூபரான ஐ ஷோ ஸ்பீடு (IshowSpeed) என்பவர் பதிலளித்தார்.
தொடர்ந்து, டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், `இதன் முடிவு எந்தளவுக்கு இருக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமின்றி, இந்தப் பதிவுக்கு விலங்கு வதைத் தடுப்பு அமைப்பு தெரிவித்த பதிலில், `உங்கள் தொழிலில் விலங்குகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க 100 யோசனைகளை மேற்கொள்ளலாம்’ என்று கூறியது.
தொடர்ந்து, மிஸ்டர் பீஸ்ட்டின் எக்ஸ் பதிவுக்கு, பல தரப்பிலிருந்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், ஒருமித்த கருத்துகளாக, கொரில்லாவை 100 மனிதர்களால் தோற்கடிக்க முடியாது என்றுதான் பதில் பெறப்பட்டது.
சராசரி கொரில்லாவின் வலிமை, மனிதரைவிட 4 முதல் 10 மடங்கு அளவில் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கொரில்லா, 800 கிலோவுக்கும் அதிகமான எடையைத் தூக்கவல்லது. இது, ஒரு பளுதூக்கும் வீரரின் எடையைவிட இரு மடங்காகும். அதுமட்டுமின்றி, 1,810 கிலோ எடையை அழுத்தும் வலிமையும் கொரில்லாவுக்கு உண்டு.
இதையும் படிக்க: டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.