எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!

பாகிஸ்தான் தாக்குதலுக்கு நேரடி அச்சுறுத்தலுக்கு பாதிக்கப்பட்ட ட்ரெவா விவசாயிகள்..
எல்லையில் பதற்றம்: அறுவடையை முடிக்க அவசரம் காட்டும் விவசாயிகள்!
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் கிட்டத்தட்ட 200 கி.மீ நீளமுள்ள சர்வதேச எல்லையில் வசிக்கும் விவசாயிகள் அறுவடையை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு, சம்பா மற்றும் கதுவா ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.25 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாகிஸ்தானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

இந்த நிலையில், ட்ரேவா, மஹாஷே-தே-கோதே, சந்து சக், கரானா, புல்லா சக் மற்றும் கொரோடனா கலன் போன்ற கிராமங்கள் அறுவடையை முடிக்கவும், தானியங்களை உலர்த்தவும், ஆலைகளுக்கு வழங்குவதற்காக இரவு பகலாக உழைத்து பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

கோதுமை மற்றும் பிற பயிர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை அறுவடை செய்யப்பட்டுவிட்டாலும், மீதமுள்ளவற்றை அறுவடை செய்து அவற்றை ஆலைகளுக்கு அனுப்பும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எல்லைக்கு 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ள ட்ரெவா, பாகிஸ்தான் தாக்குதலுக்கு நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதிலிருந்து, ட்ரெவாவில் உள்ள விவசாய சமூகம் பதட்டமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அறுவடை செயல்முறையை விரைவுபடுத்த தாசில்தார் 20 அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

நாங்கள் ஆபத்து மண்டலத்தில் வாழ்கிறோம். போர் தாக்குதல் தொடங்கும் ஒவ்வொரு முறையும், மரணத்தையும், அழிவையும் எதிர்கொள்கிறோம் என்று விவசாயி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com