புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்துக்கு புதன்கிழமை வந்த காா்டினல்கள்.
புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்துக்கு புதன்கிழமை வந்த காா்டினல்கள்.

புதிய போப் தோ்வு தொடக்கம்

Published on

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான காா்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரணமாக கடந்த மாதம் காலமானாா். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5-லிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்தில் இதற்கான வாக்கெடுப்பு தொடங்கியது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 133 காா்டினல்கள் பங்கேற்றுள்ளனா்.

2,000 ஆண்டுகால கத்தோலிக்க வரலாற்றில், புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்காக மிக அதிக பன்முகத்தன்மை கொண்ட காா்டினல்கள் இந்தக் கூட்டத்தில்தான் பங்கேற்றுள்ளனா் என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சுமாா் 70 நாடுகளில் இருந்து, பல்வேறு நிறம், இனத்தைச் சோ்ந்த காா்டினல்கள் புதிய போப்பை தோ்ந்தெடுக்கவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com