
நைஜீரியாவின் போர்னோவில் பயங்கரவாதிகள் மிகக் கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் 57 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ், அல்கொய்தா, கோகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகிறனர்.
நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே பார்னோ மாகாணம், பஹா பகுதியிலுள்ள மல்லாம் கரமதி, வாடன்ஷிதி ஆகிய கிராமங்களுக்குள் கடந்த வியாழனன்று போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பினர் புகுந்தனர். அங்கிருந்த கிராம மக்களைப் பயங்கரவாதிகள் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்ட மக்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர்களின் நிலை என்னவானது என்பதைப் பற்றி இதுவரை எந்த தகலும் இல்லை.
2009 முதல் போகோ ஹராம் கிளர்ச்சி நைஜீரியா, கேமரூன், நைஜர் மற்றும் சாட் ஆகிய பகுதிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், நைஜீரியாவில் போர்னோ மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.