மாதவிடாய் காலத்தில் பெண்கள் நடிக்க வேண்டும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக ஆய்வில் தகவல்
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Published on
Updated on
1 min read

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி உணர்வை பெண்கள் மறைக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியிலான பாதிப்பை (வலியை) அவர்கள் மறைத்துத்தான் ஆக வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் விரும்புவதாக, சமீபத்தில் 1,032 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தனது மாதவிடாய் வலியை, தனக்கு நெருங்கியவர்கூட (ஆண்) விரும்புவதில்லை என்று மூன்றில் இரண்டு பெண்கள் கூறியதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.

இந்த ஆய்வானது, கிராமப்புறங்களிலோ வளர்ந்துவரும் நகர்ப்புறங்களிலோ மேற்கொள்ளப்பட்டது அல்ல என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் காலத்தில், பெண்கள் அனுதாபத்தைத் தேட விரும்புவதில்லை என்றும், அவர்களின் வலியைக் கூட வெளிப்படுத்த முடியாததுதான் பெரும் வலியாக உள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வலியை மறைத்துக்கொண்டு, நடிப்பதைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள் என்று பெரும்பாலான பெண்கள் கூறுகின்றனர்.

62 சதவிகிதப் பெண்கள், பொது இடங்களிலும் பணியிடங்களிலும் தங்கள் மாதவிடாய் வலியை மறைத்து, சாதாரணமாகத் தோற்றமளிப்பதற்காக முயல்வதாகவும் ஆய்வு கூறுகிறது. இது அவர்களின் முந்தைய தலைமுறை பெண்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அறிவியல்ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், இன்னும் சிலவற்றில் நாம் பின்தங்கியே இருப்பதாக பெண்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com