
ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். அதில் ஒருவர் விமானியாக இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மற்றொருவர் விமானத்தில் இருந்தாரா அல்லது தரையில் இருந்தாரா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. விமான விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகளுக்கு உடனடித் தகவல் இல்லை.
டச்சு எல்லைக்கு அருகில் உள்ள கோர்ஷென்ப்ராய்ச்சில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.