

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளின்படி, வெள்ளை மாளிகையின் முக்கியப் பகுதிகளுக்கு ஊடகத் துறைசார் நபர்கள் எவரும் முன் அனுமதியின்றி செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செங்குக்கும் பத்திரிகைத் துறைச் செயலர் கரோலின் லியாவிட்டுக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (என்எஸ்சி) இருந்து அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில், வெள்ளை மாளிகையில் லியாவிட்டின் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை. அப்படிச் செல்ல விரும்பும் நிருபர்கள், உரிய முன்அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அப்பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளால் வெள்ளை மாளிகையின் ‘அறை எண் 140’-க்கு ஊடகத் துறையினர் செல்ல முடியாது.
முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகனில் பத்திரிகையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஊடகத் துறையினர் பெண்டகனிலிருந்து தங்கள் அலுவலகங்களை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.