ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சரிவு!

சரிவைச் சந்தித்த ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி
எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு)
எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு) கோப்பிலிருந்து படம் Center-Center-Delhi
Updated on
1 min read

ரஷிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. நிகழாண்டில் அக்டோபர் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் ரஷியாவின் எல்.என்.ஜி(திரவ இயற்கை எரிவாயு) ஏற்றுமதி 3.4 சதவீதம் சரிந்து 25.2 மில்லியன்(2.52 கோடி) மெட்ரிக் டன்(எம்.எம்.டி.) ஆகக் குறைந்துள்ளதை எல்.எஸ்.இ.ஜி. தரவுகள் சனிக்கிழமை(நவ. 1) வெளிக்காட்டுகின்றன.

உக்ரைனில் ரஷியாவின் ராணுவ படையெடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை நடவடிக்கைகள் ரஷிய ஏற்றுமதியில் பிரதிபலிக்கின்றன.

நிகழாண்டின் முதல் 10 மாதங்களில் ஐரோப்பிய பகுதிகளுக்கான ரஷியாவின் எல்.என்.ஜி. ஏற்றுமதி 17.9 சதவீதம் சரிந்து 11 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. கடந்தாண்டின் அக்டோபருடன் ஒப்பிடுகையில், இந்த அக்டோபரில் ஐரோப்பாவுக்கான ரஷிய எல்.என்.ஜி ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த அக்டோபரில் மட்டும் ஏற்றுமதி 21 சதவீதம் சரிந்து 0.79 மெட்ரிக் டன்னாகச் சுருங்கியது.

ஆயினும், ரஷியாவின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி. ஏற்றுமதி அக்டோபரில் 21 சதவீதம் உயர்ந்து 3.4 எம்.எம்.டி. ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது, அதற்கு முந்தைய மாத ஏற்றுமதி அளவைவிட 27 சதவீதம் உயர்வாகும்.

Summary

Russia's exports of liquefied natural gas in January-October fell by 3.4%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com