மாஸ்கோவில் எரிபொருள் குழாய்களைத் தகர்த்த உக்ரைன்: ரஷிய ராணுவத்துக்குப் பெரும் பின்னடைவு!

ரஷிய ராணுவத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய உக்ரைன்...
உக்ரைனின் ட்ரோன்கள் தயார்படுத்தப்படும் காட்சி
உக்ரைனின் ட்ரோன்கள் தயார்படுத்தப்படும் காட்சிSource: AP
Published on
Updated on
1 min read

ரஷியாவில் மாஸ்கோ அருகே எரிபொருள் நிலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய தாக்குதல்களால் ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய ராணுவ படைகளுக்கான எரிபொருள் எடுத்துச் செல்லும் முக்கிய வழித்தடமாக கோல்ட்செவோய் குழாய்வழி உள்ளது. ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள மாஸ்கோ, ரையாஸன், நிஸ்நி நோவ்கொரோட் ஆகிய பகுதிகளிலிருந்து ரஷிய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தேவையான டீசல், கேசொலின், ஜெட் எரிபொருள் ஆகியவை இந்தக் குழாய் வழி சுமார் 400 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் ஜெட் எரிபொருள், 28 லட்சம் டன் டீசல், 16 லட்சம் டன் கேசொலின் ஆகியவை இந்தக் குழாய்வழி எடுத்துச்செல்லப்படுகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(அக். 31) நள்ளிரவில் ரஷியாவின் ராமென்ஸ்கி மாவட்டத்தில் நடத்தப்பட்ட உக்ரைனின் துல்லிய தாக்குதல்களில் 3 முக்கிய எரிபொருள் குழாய்கள் சேதமடைந்திருப்பதாக உக்ரைனின் ராணுவ முகமைகளுள் ஒன்றான ‘எச்.யூ.ஆர்’ டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

Summary

Ukrainian forces hit an important fuel pipeline in the Moscow region that supplies the Russian army, Ukraine's military intelligence said Saturday, a claim that came amid a sustained Russian campaign of massive drone and missile attacks on Ukraine's energy infrastructure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com