

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பாலஸ்தீனர்களின் உடல்களை திங்கள்கிழமை(நவ. 3) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட 3 பிணைக்கைதிகள் உடல்களும் கடந்த 2023-இல் அப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்ரேல் வீரர்கள் மூவரது உடல்கள் என்று அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த அக். 10-இல் காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அமல் ஆன பின், ஹமாஸிடமிருந்து 20 பிணைக்கைதிகள் உடல்கள் இஸ்ரேலிடம் ஒபடைக்கப்பட்டுள்ளன. 8 உடல்கள் ஹமாஸிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும்போதும் இஸ்ரேல் தரப்பிடமிருந்து 15 பாலஸ்தீனர்கள் உடல்கள் விடுவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இதுவரை மொத்தம் 270 பாலஸ்தீனர்கள் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.