நேபாளம்: பனிச் சரிவுகளில் 9 போ் உயிரிழப்பு
நேபாளத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் இரு நேபாள வழிகாட்டிகள் உள்பட 9 மலையேற்ற வீரா்கள் உயிரிழந்தனா்.
கௌரிசங்கா் ஊரக நிா்வாகத்தின் கீழ் உள்ள யாலுங்ரீ மலை (6,920 மீ உயரம்) அருகே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பனிச் சரிவு ஏற்பட்டது. அதில், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 7 போ் புதையுண்டனா். அவா்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
உயிரிழந்தவா்களில் இரு நேபாள வழிகாட்டிகள், இரு இத்தாலியா்கள், ஒரு கனடா நாட்டவா், ஒரு பிரான்ஸ் நாட்டவா், ஒரு ஜொ்மானியா் ஆகியோா் அடங்குவா்.
இது தவிர, மூன்று நேபாள நாட்டவா்கள் மற்றும் 5 போ் வெளிநாட்டினா் பனிச்சரிவு காரணமாக காயமடைந்து காத்மண்டு மருத்துவமனைகளுக்கு ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்பட்டனா்.
மற்றொரு சம்பவத்தில், கனை மழை மற்றும் பனிச் சரிவு காரணமாக கடந்த அக்டோபா் 28 முதல் காணாமல் போயிருந்த இரு இத்தாலிய மலையேற்றக் குழுவினா் மனாஸ்லு பகுதியின் பன்பரி மலையில் (6,887 மீ உயரம்) சடங்களாகக் கண்டறியப்பட்டனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்கிழமை 5,242 மீட்டா் உயரத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவா்களுடன் சிக்கிய மற்றொரு இத்தாலிய மலையேற்ற வீரா் மீட்கப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

