மம்தானி மட்டுமல்ல... ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த மற்றொரு இந்திய வம்சாவளி!

ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த இந்திய வம்சாவளி மேயர் பற்றி...
அஃப்தாப் புரேவல்
அஃப்தாப் புரேவல் Instagram: Aftab Pureval
Published on
Updated on
2 min read

அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.

இதையடுத்து, சின்சினாட்டி நகரின் மேயராக தொடர்ந்து இரண்டாவது முறையாக அஃப்தாப் (வயது 43) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்சினாட்டி மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்ற அஃப்தாப் புரேவல், முதல் ஆசிய - அமெரிக்க மேயர் என்ற வரலாற்றை படைத்தார். 66 வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக சுயேச்சை வேட்பாளராக சின்சினாட்டி மேயர் தேர்தலில் அஃப்தாப் புரேவல் களமிறங்கினார். இவரை எதிர்த்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை குடியரசுக் கட்சி களமிறக்கியது. (ஜே.டி. வான்ஸும் கோரி போமனும் ஒரே தந்தைக்கு பிறந்தவர்கள்)

ஜே.டி. வான்ஸும் கோரி போமனும்
ஜே.டி. வான்ஸும் கோரி போமனும்Instagram: Cory Bowman

இருப்பினும், மக்களின் பேராதரவால் இரண்டாவது முறையாக சின்சினாட்டி மேயராக அஃப்தாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, சுயேச்சையாக தேர்தலில் நின்றாலும் ஜனநாயகக் கட்சி அஃப்தாபுக்கு ஆதரவு அளித்தது.

இந்திய வம்சாவளி அஃப்தாப்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தேவேந்தர் சிங் புரேவால் மற்றும் திபெத்திய அகதி ட்ரென்கோ என்பவருக்கு மகனாக 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் அஃப்தாப்.

சிறு வயது முதலே அரசியல் ஆர்வமுடையவராக இருந்த அஃப்தாப், 8ஆம் வகுப்பு பயிலும்போது மாணவர் தேர்தலில் வெற்றிபெற்றார்.

சின்சினாட்டி சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அஃப்தாப், 2008 ஆம் ஆண்டு வாஷிங்டனில் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், ஓஹியோவில் அரசின் சிறப்பு உதவி வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

2018 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த அஃப்தாப், மாவட்ட தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு, குடியரசுக் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.

2021 மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயரை 66 சதவீத வாக்குகளுடன் தோற்கடித்து அஃப்தாப் வரலாறு படைத்தார். கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸை ஆதரிப்பதாக அஃப்தாப் அறிவித்திருந்தார்.

அஃப்தாப், விட்னி விடிஸ் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2025 ஆண்டின்படி, அஃப்தாபின் சொத்து மதிப்பு 10 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும்.

Summary

Not just Mamdani... another Indian-origin Aftab Pureval who defeated J.D. Vance's brother

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com