

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ யார்க் நகர மேயராக இந்திய வம்சாவளியான ஸோரான் மம்தானி வெற்றிபெற்ற நிலையில், பொதுமக்களின் முன்பாக வெற்றியுரை ஆற்றினார்.
இந்த உரையின்போது, ஸோரான் மம்தானி ``டிரம்ப் அவர்களே, எனது வெற்றியுரையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களிடம் சொல்வதற்கு சில உள்ளன. ஆகையால், காணொலியின் ஒலியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
டிரம்ப்பால் உருவாக்கப்பட்ட நகரமே, அவரை தோற்கடித்தது. இருள் நிறைந்த அரசியலுக்கு மத்தியில், நியூ யார்க் ஒளியாக இருக்கும்’’ என்று பேசினார்.
இந்த உரையின்போது, `ஸோரான், ஸோரான்’ என்று அரங்கத்திலிருந்தோர் கோஷமிட்டதையும் சுட்டிக் காட்டினார், ஸோரான் மம்தானி.
மம்தானி கூறியதுபோலவே, ட்ரூத் சோசியல் சமூக வலைத்தளத்தில் `இப்படித்தான் அது தொடங்கும்’ என்று டிரம்ப் பதிவிட்டார்.
இதையும் படிக்க: வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.