

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அருகே இருந்த நிர்வாகி ஒருவர் திடீரென மயக்கமடைந்ததால் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், உடல் பருமன் குறைப்பு மருந்துகளின் விலையைக் குறைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்போது, மருத்துவ அதிகாரிகள் உள்பட மருந்து நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மருந்து விலைக் குறைப்பு குறித்து டிரம்ப் அறிவிக்கும்போது, அவரின் பின்னால் நின்றுகொண்டிருந்த நோவோ நார்டிஸ்க் நிறுவனத்தின் நிர்வாகியான கார்டன் ஃபிண்ட்லே என்பவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
இருப்பினும், அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை, நுகர்வோருக்கு நேரடியாக விற்க முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு ஜிஎல்பி -1 மருந்தை மிகவும் மலிவான விலையில் வழங்குவதற்கு இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.