

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், நடத்தப்பட்ட கையெறி வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
கைபர் பக்துன்குவாவின், கைபர் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (நவ. 7) கையெறி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில், 3 பேர் பலியானதாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் படுகாயமடைந்தவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், தாக்குதல் நடைபெற்ற குடியிருப்புப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்னதாக, பாகிஸ்தானில் கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டில் (2025) அங்கு நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.