இதய நோய், நீரிழிவு.. உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்!

ஹெச்1-பி விசா பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி...
Trump
கோப்புப்படம்IANS
Published on
Updated on
1 min read

புற்றுநோய், இதய நோய், நீரிழிவு போன்ற நோயுள்ளவர்களின் விசாக்களை நிராகரிக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்பொருட்டு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவில் வேலைக்குச் செல்வதற்கு இந்தியர்கள் அதிகமாக நம்பியிருக்கும் ஹெச்1-பி விசாவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதுவரை ஹெச்1-பி விசாவில் உள்ள விதிமீறல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டு முதற்கட்டமாக இன்று 175 விதிமீறல்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்கா செல்ல ஹெச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்போரில் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு விசா வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் நோய்கள், மனநலம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்களின் விசாக்களை நிராகரிக்குமாறு அமெரிக்காவில் உள்ள தூதரகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உடல்நலக் குறைவு உள்ளவர்களால் அமெரிக்காவுக்கு நிதிச்சுமை ஏற்படலாம், இந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் விண்ணப்பதாரரின் ஆரோக்கியத்தைக் கவனத்தில்கொண்டு விசாவை ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

​​ஆஸ்துமா, தூக்கத்தில் மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் தூதரக அதிகாரிகள் கவனத்தில்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரரின் குடும்பத்தினரின் உடல்நலத்தையும் சோதிக்க வேண்டும், குடும்பத்தினருக்கு பிரச்னை இருந்தால் அவர்களது பராமரிப்புக்கான செலவை செய்ய முடியுமா? விண்ணப்பதாரர் வேலையைத் தொடர முடியுமா? ஆகியவற்றை சோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Trump administration directs visa officers to deny entry to immigrants with medical conditions like diabetes, obesity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com