

காஸாவில் இனப் படுகொலைக் குற்றங்களுக்கு எதிராக இஸ்ரேலின் பிரதமர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 37 பேரை கைது செய்ய துருக்கி அரசு ஆணை பிறப்பித்தது.
காஸாவில் ராணுவம் இனப் படுகொலை செய்யப்படுவதாகவும், மனிதகுலத்துக்கு எதிராகச் செயல்படுவதாகவும் இஸ்ரேல் மீது துருக்கி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்பட 37 பேரை கைது செய்ய துருக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக துருக்கி அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படுவோர்களின் பட்டியலில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர், எல்லை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இயால் ஜமீர், கடற்படைத் தளபதி டேவிட் சார் சலாமா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே, துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், ``துருக்கி அதிபர் எர்டோகனின் ஆட்சியில் அரசியல்வாதிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், மேயர்கள் ஆகியோரை மௌனமாக்குவதற்காகக் கையாளப்படும் ஒரு கருவியாக துருக்கியின் நீதித் துறை மாறியுள்ளது’’ என்று விமர்சித்துள்ளது.
இருப்பினும், துருக்கியின் கைது ஆணைக்கு ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறுவது மிகப் பெரிய அவமானம்: டிரம்ப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.