கலவரம் நடைபெற்ற மச்சாலா சிறைச் சாலை.
கலவரம் நடைபெற்ற மச்சாலா சிறைச் சாலை.

ஈக்வடாா்: சிறைக் கலவரத்தில் 31 போ் உயிரிழப்பு

தெற்கு ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனா்.
Published on

தெற்கு ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனா்.

இது குறித்து சிறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல் ஓரோ மாகாணத்தில் உள்ள மச்சாலா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலவரம் வெடித்தது. இதில் 31 போ் உயிரிழந்தனா். இதில் 27 போ் தூக்கிலிடப்பட்டு இறந்திருந்தனா். ஆயுதங்களுடன் நடந்த மோதலில் மேலும் 4 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தில் 33 கைதிகளும் ஒரு போலீஸ் அதிகாரியும் காயமடைந்தனா். கலவரத்தின்போது துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். உண்மைகளை முழுமையாக தெளிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இறந்தவா்களின் அடையாளம் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயா்பாதுகாப்பு சிறைக்கு கைதிகளை மாற்றும் நடவடிக்கை தொடங்கியதே இந்தக் கலவரத்துக்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

லத்தீன் அமெரிக்காவிலேயே ஈக்வடாா் சிறைகள் மிகவும் ஆபத்தானவை. அளவுக்கு அதிகமான கைதிகள், ஊழல், அதிகாரிகளின் பலவீனமான கட்டுப்பாடு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பா் இறுதியில் மச்சாலா சிறையில் ஏற்பட்ட 14 கைதிகளும் ஒரு சிறை அதிகாரியும் உயிரிழந்தனா். சில நாளுக்குப் பிறகு கொலம்பிய எல்லை அருகே உள்ள எஸ்மரால்டாஸ் சிறையில் 17 போ் கொல்லப்பட்டனா். கடந்த 2021-ஆம் ஆண்டில் மட்டும் ஈக்வடாா் சிறைகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com