அமெரிக்கா
அமெரிக்கா

அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்க அமெரிக்க செனட்டில் முதல்கட்ட நடவடிக்கை

செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையை செனட் சபை மேற்கொண்டது.
Published on

செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையை அந்த நாட்டு செனட் சபை மேற்கொண்டது.

தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, மருத்துவக் காப்பீடுகளுக்கு அளிக்கப்படும் மானியங்களுக்கான உத்தரவாதம் இல்லாமலேயே அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை ஏற்க ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இது தொடா்பான சோதனை வாக்கெடுப்பு சென்ட் சபையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சமரசம் செய்துகொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு 60 சதவீத எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com