

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் அரசியல் உதவிகளுக்காக 2,60,000 அமெரிக்க டாலர்கள் அளவிலான விலை உயர்ந்த பொருள்களை லஞ்சமாகப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வழக்குகளில் இருந்து பிரதமர் நெதன்யாகு விடுவிக்கப்பட வேண்டுமெனவும், அவருக்கு இஸ்ரேல் அதிபர் மன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இஸ்ரேல் அதிபர் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமெனக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளதாக, இன்று (நவ. 12) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தில்,
“குறைந்தது 3,000 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த அமைதியை நாம் தற்போது நிலைநிறுத்தியுள்ளோம். போர்க்காலத்தில் வலிமையான பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவை முழுமையாக மன்னிக்குமாறு இதன் மூலம் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கமுடையவை எனக் கூறி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இருப்பினும், கடந்த 2023 ஆம் ஆண்டு காஸா மீதான போர் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பறக்கும் கார்கள் உற்பத்தியைத் தொடங்கியது சீன நிறுவனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.