விபத்தில் உருக்குலைந்த பேருந்து.
விபத்தில் உருக்குலைந்த பேருந்து.

பெரு: சாலை விபத்தில் 37 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா்.
Published on

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு பேருந்து, கராவெலி மாகாணம், சாலா நகரில் இருந்து பெருவின் இரண்டாவது பெரிய நகரான அரேகுய்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் குழந்தைகள், முதியவா்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

பெருவை சிலி நாட்டுடன் இணைக்கும் பான்அமெரிக்கானா நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனத்துடன் மோதி, 200 மீட்டா் ஆழமான பள்ளத்துக்குள் உருண்டு ஆற்றுப் படுகையில் விழுந்து நொறுங்கியது.

இதில் 37 போ் உயிரிழந்தனா்; 24 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிா்பிழைத்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுவருகிறாா். விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

பெருவில் அளவுக்கு அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், மோசமான சாலைகள், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாதது, மலைப்பாங்கான நிலப்பரப்பு போன்ற காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் அங்கு நடைபெற்ற சாலை விபத்துகளில் 3,173 போ் உயிரிழந்தனா்.

X
Dinamani
www.dinamani.com