கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸா: மேலும் ஒரு பிணைக் கைதியின் உடல் ஒப்படைப்பு

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஓா் இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது.

News image
இஸ்ரேலில் இருந்து காஸாவின் கான் யூனிஸ் நகர மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட பாலஸ்தீனரின் உடல்.
Updated On :14 நவம்பர் 2025, 5:43 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஓா் இஸ்ரேலிய பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது.

அந்த உடல், கடந்த 2023 அக்டோபா் தாக்குதலின்போது தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட மெனி காடா்டுடையது என்று அடையாளம் காணப்பட்டது. அவரின் மனைவி அயலெட் தாக்குதலின்போது உயிரிழந்தாா்.

அந்த உடல் ஒப்படைக்கப்பட்டதற்கு பதிலாக, இஸ்ரேலில் இருந்த 15 பாலஸ்தீனா்களின் சடலங்களை அந்த நாட்டு அரசு காஸாவுக்கு அனுப்பியதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவது உறுதியாகியுள்ளது.

இத்துடன், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச போா் நிறுத்த திட்டம் காஸாவில் கடந்த மாதம் 10-ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 25 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினா் ஒப்படைத்துள்ளனா். பதிலுக்கு, 330 பாலஸ்தீனா்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியுள்ளது.