சிலியில் அதிபர் தேர்தல்: வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!

சிலியில் தேர்தல் - வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!
வலதுசாரி வேட்பாளரான ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட்
வலதுசாரி வேட்பாளரான ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட்AP
Published on
Updated on
1 min read

சாண்டியாகோ: தென் அமெரிக்காவிலுள்ள சிலியில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை(நவ. 16) நடைபெறுகிறது.

இத்தேர்தலில் கம்யூனிஸ்ட் ஆதரவாளரும் முன்னாள் தொழிலாளர் அமைச்சருமான ஜென்னெட் ஜாரா(51) மற்றும் வலதுசாரி வேட்பாளரான ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட்(59) ஆகிய இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களுடன் சேர்த்து மொத்தம் 8 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

ஜென்னெட் ஜாரா
ஜென்னெட் ஜாராAP

சிலி அதிபர் தேர்தலில் சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச் செலுத்துகின்றனர். சிலி நேரப்படி ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு(இந்திய நேரப்படி நவ. 17 அதிகாலை 2.30 மணி) முடிவடைகிறது.

Summary

Chile votes for its next president and parliament on Sunday in a contest expected to favour the right as candidates play on popular fears over organised crime and immigration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com