

மாஸ்கோ: வெளியுறவு விவகாரங்களுக்கான அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாஸ்கோவில் திங்கள்கிழமை(நவ. 17) ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியா - ரஷியா இருநாட்டு உறவுகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான' எஸ்சிஓ-வில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார். ரஷியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவுக்குச் சென்றிருக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கலந்து கொள்கின்றனர். எனினும், பாகிஸ்தான் - இந்தியா அமைச்சர்கள் இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா என்பதை இருநாட்டுத் தரப்பிலிருந்தும் உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, தோஹாவில் இன்று(நவ. 16) கத்தார் பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜசிம் அல் தனியைச் சந்தித்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியா - கத்தார் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.