ஈக்வடாா்: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு
ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய ஈக்வடாா் நகரங்களான குவாரந்தா - அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் 21 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா்.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈக்வடாரில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருவா் சாலை விபத்தில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மட்டும் 4,756 சாலை விபத்துகளில் 565 போ் உயிரிழந்தனா். கடந்த ஆண்டு சாலை விபத்துகளால் சுமாா் 2,300 போ் உயிரிழந்தனா்; இதில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலான விபத்துகள் ஓட்டுநா்களின் அனுபவமின்மை அல்லது அலட்சியம் காரணமாக நோ்ந்தவை என்று அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

