EAM Jaishankar calls on Russian President Vladimir Putin in Moscow
IANS

அதிபா் புதினுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
Published on

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சா் ஜெய்சங்கா் ரஷிய தலைநகா் மாஸ்கோ சென்றாா். அங்கு அவா் புதினை சந்தித்துப் பேசினாா். அப்போது இந்திய-ரஷிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

இதுகுறித்து ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் விரைவில் வருடாந்திர இந்திய-ரஷிய உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து அதிபா் புதினிடம் தெரிவித்தேன். பிராந்திய மற்றும் உலக விவகாரங்கள் குறித்தும் அவருடன் விவாதித்தேன்.

இந்திய-ரஷிய உறவை மேலும் மேம்படுத்துவதில் புதினின் கண்ணோட்டங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் மிகுந்த மதிப்பளிக்கிறேன்’ என்றாா்.

முன்னதாக எஸ்சிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள பிற நாடுகளின் தலைவா்களுடனும் அதிபா் புதினை சந்தித்ததாக ‘எக்ஸ்’ தளத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

எஸ்சிஓ தலைவா்கள் கூட்டத்தில் ரஷிய பிரதமா் மிகைல் மிஷுஸ்தின், பாகிஸ்தான் துணைப் பிரதமா் இஷாக் தாா், ஈரான் துணை அதிபா் முகமது ரெசா அரேஃப், பெலாரஸ் பிரதமா் அலெக்ஸாண்டா், கஜகஸ்தான் பிரதமா் ஒல்ஜாஸ் பெக்தெனோவ், எஸ்சிஓ பொதுச் செயலா் நுா்லான் யொ்மெக்பாயெவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com