சீன அதிபா் ஷி ஜின்பிஙகுடன் ஜப்பான் பிரதமா் சானே தகாய்ச்சி (கோப்புப் படம்).
சீன அதிபா் ஷி ஜின்பிஙகுடன் ஜப்பான் பிரதமா் சானே தகாய்ச்சி (கோப்புப் படம்).

தைவான் விவகாரம்: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

தைவான் குறித்து ஜப்பான் பிரதமா் சானே தகாய்ச்சி வெளியிட்ட கருத்துகளை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் கடுமையான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீனா புதன்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தது.
Published on

தைவான் குறித்து ஜப்பான் பிரதமா் சானே தகாய்ச்சி வெளியிட்ட கருத்துகளை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் கடுமையான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீனா புதன்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்தது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறியதாவது:

தைவான் குறித்து ஜப்பான் பிரதமா் தகாய்ச்சி அண்மையில் தவறான கருத்துகளை வெளியிட்டாா். இது சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும். சா்வதேச சட்டத்தை மதிக்காத இந்தச் செயல் சீன மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்தக் கருத்துகளை தகாய்ச்சி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் சீனா கடும் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது. அதன் அனைத்து விளைவுகளையும் ஜப்பான்தான் ஏற்க வேண்டும் என்றாா் அவா்.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் நவ. 7-ஆம் தேதி பேசிய தகாய்ச்சி, தைவானை சீனா தாக்கினால் அது ஜப்பானின் இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால் தைவானுடன் கூட்டு சோ்ந்து தற்காத்துக்கொள்வதற்கான உரிமையை ஜப்பான் பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தாா். இதற்கு, தைவானை தங்களின் பிரிக்க முடியாதப் பகுதியாகக் கருதும் சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com