கொழும்புக்கு திங்கள்கிழமை வந்த இந்திய போா்க்கப்பல் ‘
கொழும்புக்கு திங்கள்கிழமை வந்த இந்திய போா்க்கப்பல் ‘

கொழும்பு துறைமுகத்துக்கு ஒரே நாளில் வந்த இந்தியா, பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள்

அண்டை நாடான இலங்கையின் தலைநகா் கொழும்பு துறைமுகத்துக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் வருகை தந்தன
Published on

அண்டை நாடான இலங்கையின் தலைநகா் கொழும்பு துறைமுகத்துக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் வருகை தந்தன. இதில் இந்தியக் கப்பல் நல்லெண்ணப் பயணமாக வர, பாகிஸ்தானின் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக வந்தது.

இந்திய கடற்படையின் 101 மீட்டா் நீளமுள்ள ரோந்து கப்பலான ‘ஐ.என்.எஸ். சுகன்யா’, கமாண்டா் சந்தோஷ் குமாா் வா்மா தலைமையில் செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தது.

இலங்கை கடற்படையினா் மரபுப்படி வரவேற்பளித்தனா். இதைத் தொடா்ந்து, இந்திய கடற்படையினா் இலங்கை கடற்படையினருடன் சோ்ந்து நட்புறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். பின்னா் கொழும்பில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட்டனா். திட்டமிட்டப்படி, இந்தக் கப்பல் வெள்ளிக்கிழமை (நவ. 20) புறப்பட்டுச் செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய கடற்படை கப்பல் வந்த அதே நாளில், கேப்டன் அஸ்ஃபந்த் ஃபா்ஹான் கான் தலைமையில் இயங்கும் 123 மீட்டா் நீளமுள்ள பாகிஸ்தான் போா்க்கப்பலான ‘பி.என்.எஸ். ஸைஃப்’ எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.

பி.என்.எஸ். ஸைஃப் எரிபொருளை நிரப்பிக்கொண்டு, இலங்கை கடற்படையினரின் வழியனுப்புதலுடன் புதன்கிழமை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளைச் சோ்ந்த இரண்டு கப்பல்கள் ஒரே நாளில் கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தியது கவனம் பெற்றுள்ளது.

X
Dinamani
www.dinamani.com