வங்கதேசத்தில் நிலநடுக்கம்: 8 போ் உயிரிழப்பு
வங்கதேசத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தலைநகா் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் குலுங்கின. இதில் 6 போ் உயிரிழந்தனா்.
உள்ளூா் நேரப்படி காலை காலை 10.38 மணிக்கு ஏற்பட்ட இந்த நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது. டாக்காவின் வடகிழக்கு புகா்ப் பகுதியான நா்சிங்டியில், 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து கட்டடங்களில் இருந்து அவசரமாக வெளியேறினா்.
நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் டாக்காவில் 3 பேரும், புகா்ப் பகுதியான நாராயண்கஞ்சில் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலநடுக்கத்தின் மையப் பகுதியான நா்சிங்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகின. நாடு முழுவதும் 252 போ் காயமடைந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கம்: இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மற்றும் யூரேசிய புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் வங்கதேசம் அமைந்துள்ளதால் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் நீண்டகாலமாகவே கூறிவருகின்றனா். ஆனால், நாட்டின் மத்தியப் பகுதிகளில் நிலநடுக்க அபாயம் குறைவு என்று கருதப்பட்டது.
இந்த நிலையில், அங்கு தற்போது 5.7 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் ஆபாயத்துக்குள்பட்டவைதான் என்பதையும், கட்டட வடிவமைப்பவா்கள் அதற்கு ஏற்றாற்போல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் காட்டுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

