காஸா சிட்டியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம்.
காஸா சிட்டியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உருக்குலைந்த கட்டடம்.

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸாவின் கான் யுனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.
Published on

போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸாவின் கான் யுனிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்திய தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். அதற்கு முன்னதாகவும் காஸா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

கான் யூனிஸ் நகரில் தங்கள் வீரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேல் வீரா்களை நோக்கி தாங்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று ஹமாஸ் படையினா் மறுப்பு தெரிவித்துள்ளது.

இத்துடன், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 32 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் சிறுவா்கள்; 8 போ் பெண்கள்.

காஸா சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2023 அக். 7-ஆம் தேதியில் இருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 69,546 போ் உயிரிழந்துள்ளனா்; 1,70,833 போ் காயமடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com