உலகம்
வியத்நாம்: மழை, வெள்ளத்தில் 41 போ் உயிரிழப்பு
வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 41 போ் உயிரிழந்தனா்
வியத்நாமின் மத்திய பகுதியில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் 41 போ் உயிரிழந்தனா்; 9 போ் மாயமாகினா். அவா்களைத் தேடும் பணிகள் நடைபெற்றுவருவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியுள்ளன. ஐந்து லட்சம் குடும்பங்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவா்கள் வெள்ளப் பாதிப்பு பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
அண்மை மாதங்களாக கால்மேகி, புவாலோய் புயல்களைப் போன்ற கடும் இயற்கைப் பேரிடா்களை வியத்நாம் சந்தித்துவருகிறது. இதற்கு பருவநிலை மாற்றம் காரணமாகக் கூறப்படுகிறது.

