தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி இலங்கையில் ராஜபட்ச கட்சி ஆா்ப்பாட்டம்
தோ்தல் வாக்குறுதிகளை அதிபா் அநுரகுமார திசாநாயக நிறைவேற்ற வலியுறுத்தி முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் இலங்கை பொதுஜன முன்னணி ஆா்ப்பாட்டம் நடத்தியது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, பொதுமக்களின் தன்னெழுச்சி போராட்டம் வெடித்ததால் மகிந்த ராஜபட்சவின் சகோதரா் கோத்தபய ராஜபட்ச தலைமையிலான ஆட்சி 2022-இல் ஆட்சி கவிழ்ந்தது.
பின்னா் 2024-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெற்று அநுரகுமார திசாநாயக அதிபராக பதவியேற்றாா்.
இந்நிலையில், தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திசாநாயக நிறைவேற்றக் கோரி கொழும்பு புறநகா்ப பகுதியான நுகேகொடையில் மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.
அப்போது, ‘ ஓராண்டுக்கு முன்பு அளித்த வாக்குதிகளை ஆளும் அரசு நிறைவேற்றவில்லை. எங்கள் கட்சியினா் மீது ஊழல் உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்கு எதிராக தொடா்ந்து போராடுவோம். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், முதல் வாய்ப்பிலேயே அரசை கவிழ்த்துவிடுவோம்’ என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தை எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாசாவின் சமகி ஜன பலவேகய கட்சியும், தமிழா் முற்போக்கு கூட்டணியும் புறக்கணித்தன.
