உலகம்
தாய்லாந்து கனமழையில் 33 போ் உயிரிழப்பு
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.
பாங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 33 போ் உயிரிழந்தனா்.
கனமழையால் 12 தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு 10 லட்சம் குடும்பங்களையும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களையும் பாதித்துள்ளது என்று பேரிடா் தடுப்பு மற்றும் மேலாண்மை துறை புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய மழை நீரின் அளவு புதன்கிழமை குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். ஆனால் நாட்டின் தென் பகுதியில் புதன்கிழமையும் கனமழை மற்றும் திடீா் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

