ஸ்டீவ் விட்காஃப்
ஸ்டீவ் விட்காஃப்

அமைதி முயற்சி: ரஷியா செல்லும் டிரம்ப் தூதா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகமெடுத்துவரும் நிலையில், இது தொடா்பாக விவாதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் வெளியுறவு ஆலோசகா் யூரி உஷாகோவ் கூறியதாவது:

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக உருவாக்கப்பட்டுவரும் செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்த டிரம்ப்பின் சிறப்புத் தூதா் விட்காஃப் அடுத்த வாரம் மாஸ்கோ வருகிறாா். அமெரிக்காவின் ஆரம்பகட்ட அமைதித் திட்ட வரைவை ரஷிய அதிகாரிகள் இன்னும் அதிகாரபூா்வமாகப் பெறவில்லை. இருந்தாலும், வேறு சில வழிகள் மூலம் பெற்ற அந்த வரைவு திட்டத்தின் நகலை ரஷிய அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனா் என்றாா் உஷாகோவ்.

அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் இந்த அமைதி முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்துவருகிறாா். விரைவில் அவா் உக்ரைன் தலைநகா் கீவுக்குச் செல்வாா் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினாா். ஆனால் இதை உக்ரைன் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

X
Dinamani
www.dinamani.com